/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கிணற்றில் தவித்தஆட்டுக்குட்டி மீட்பு கிணற்றில் தவித்தஆட்டுக்குட்டி மீட்பு
கிணற்றில் தவித்தஆட்டுக்குட்டி மீட்பு
கிணற்றில் தவித்தஆட்டுக்குட்டி மீட்பு
கிணற்றில் தவித்தஆட்டுக்குட்டி மீட்பு
ADDED : மார் 25, 2025 01:01 AM
கிணற்றில் தவித்தஆட்டுக்குட்டி மீட்பு
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த மோடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நாகநாதன், 50; இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று, அப்பகுதியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது ஆட்டுக்குட்டி ஒன்று அங்குள்ள, 20 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்து வந்த வெப்படை தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.