ADDED : மார் 19, 2025 01:04 AM
வாரச்சந்தையை திறக்க கோரிக்கை
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்., பேளுக்குறிச்சி செல்லும் சாலையில், வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர், காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்களை வாங்கி செல்கின்றனர். சில நேரங்களில், சாலையோரம் வியாபாரிகள் கடைகள் அமைத்து, வியபாரம் செய்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால், வியாபாரிகளின் வசதிக்காக டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில், 100 கடைகளுடன் புதிய வாரச்சந்தை கட்டும் பணி, கடந்தாண்டு துவங்கி, 95 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
இதை தொடர்ந்து, சில மாதங்களாக மீதமுள்ள பணிகளை முடிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டவுன் பஞ்., நிர்வாகம் பணிகளை முடித்து வாரச்சந்தையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.