ADDED : மார் 14, 2025 02:02 AM
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அடுத்த, ஆவாரங்காடு நகராட்சி மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா, நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில், துணைத் தலைவர் பாலமுருகன் முன்னிலையில் நடந்தது.
பள்ளிப்பாளையம் யூனியன், நகராட்சி மற்றும் குமாரபாளையம் நகராட்சியை சேர்ந்த, 140 கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தட்டில் வளையல், பூ, பழம், மஞ்சள், குங்குமம், கடலை மிட்டாய் ஆகியவை சீர் வரிசையாக வழங்கப்பட்டன. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புனிதவதி மற்றும் அதிகாரி
கள் கலந்து கொண்டனர்.