/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பெரியசாமி கோவிலுக்கு சென்ற அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை பெரியசாமி கோவிலுக்கு சென்ற அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை
பெரியசாமி கோவிலுக்கு சென்ற அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை
பெரியசாமி கோவிலுக்கு சென்ற அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை
பெரியசாமி கோவிலுக்கு சென்ற அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை
ADDED : ஜூலை 24, 2024 07:21 AM
சேந்தமங்கலம் : முத்துக்காப்பட்டி அருகே, ஒட்டடி பெரியசாமி கோவிலுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை அடிவாரத்தில், பிரசித்தி பெற்ற ஒட்டடி பெரியசாமி கோவில் உள்ளது. ஏராளமான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு நேர்த்திக்கடனாக ஆடு, கோழி பலியிட்டு செல்கின்றனர். அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை-களில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த கோவில் முத்துக்காப்பட்டியில் இருந்து, 5 கி.மீ., தொலையில் கொல்லி-மலை அடிவாரத்தில் உள்ளதால், பக்தர்களின் வசதிக்காக நாமக்கல், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.ஏராளமானோர் பயன-டைந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கோவிலுக்கு செல்லும் அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், தினமும் ஏராளமான பக்-தர்கள் குழந்தைகளுடன் முத்துக்காப்பட்டி பைபாஸ் மெயின் ரோட்டில் இருந்து. 4 கி.மீ., துாரம் நடந்து செல்லும் நிலை உள்-ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுவ-துடன், பெண்கள் மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே, நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.