ADDED : ஜூலை 24, 2024 08:08 AM
ப.வேலுார் : ப.வேலுாரில், இடையூறாக சாலையில் வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன.
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அனு-மதி பெறாமலும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், 50க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளதாக புகார் எழுந்தது. அதனால் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருநாவுக்கரசு, பிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவிட்டார். துப்புரவு மேற்பார்-வையாளர் ஜனார்த்தனன் தலைமையில் துாய்மை பணியாளர்கள், ப.வேலுார் நான்கு ரோடு, பஸ் ஸ்டாண்ட், முக்கோண பூங்கா, மோகனுார் பிரிவு சாலை, பழைய பைபாஸ் சாலைகளில் இருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றினர்.