/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 70 லட்சம் தொழிலாளர்களின் கணினி தரவுகளை மீட்க கோரி ஆர்ப்பாட்டம் 70 லட்சம் தொழிலாளர்களின் கணினி தரவுகளை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்
70 லட்சம் தொழிலாளர்களின் கணினி தரவுகளை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்
70 லட்சம் தொழிலாளர்களின் கணினி தரவுகளை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்
70 லட்சம் தொழிலாளர்களின் கணினி தரவுகளை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 17, 2024 09:10 AM
நாமக்கல்: நாமக்கல்லில், நேற்று இந்திய தொழிற்சங்க மையம், சி.ஐ.டி.யு., மாவட்டக்குழு சார்பில், மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்-தது.
மாவட்ட தலைவர் அசோகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்-கொடி துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் வேலுசாமி, பொருளாளர் ரங்கசாமி, துணை செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர். மாநில துணைத்த-லைவர் சிங்காரவேலு சிறப்புரையாற்றினார். முறைசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த, 70 லட்சம் தொழிலாளர்களின் தரவுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் செயலி முழுமையாக செயல்படும் வரை, நேரடி-யாக மனுக்கள் பெறுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மாவட்ட அலுவலகங்களில் தேங்கியுள்ள அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீ-லனை முடித்து உரிய காலத்தில் பணப்பயன்கள் வழங்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகை பெறுவதை காரணம் காட்டி, நலவாரிய ஓய்வூதி-யத்தை நிராகரிக்க கூடாது என்பன உள்பட பல்-வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.