ADDED : ஜூலை 24, 2024 08:07 AM
நாமக்கல், : நாமக்கல்-, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
பருத்தி ஏலத்-திற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், 131 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதில், ஆர்.சி.ெஹச்., ரகம் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு, 7,199 முதல், 7,658 ரூபாய் வரையிலும், கொட்டு மட்ட ரகமானது, 4,099 முதல், 4,655 ரூபாய் வரை என, மொத்தம் 33 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது.