Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விவசாயிகள், தொழில்முனைவோருக்கு ஏற்ற பட்ஜெட்

விவசாயிகள், தொழில்முனைவோருக்கு ஏற்ற பட்ஜெட்

விவசாயிகள், தொழில்முனைவோருக்கு ஏற்ற பட்ஜெட்

விவசாயிகள், தொழில்முனைவோருக்கு ஏற்ற பட்ஜெட்

ADDED : ஜூலை 24, 2024 07:21 AM


Google News
நாமக்கல : மத்திய அரசின், 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்-கையை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 7 வது முறையாக லோக்சபாவில் நேற்று வெளியிட்டார். இது குறித்து, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன் விபரம்:

தமிழக விவசாயிகள் சங்க, (உழவர் பெருந்தலைவர் நாராயண-சாமி நாயுடுவின்) மாநில தலைவர் ஆர்.வேலுசாமி: மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில், 25 சதவீதம் மத்திய பா.ஜ., அரசின், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் திட்டங்கள் என்று சொல்லி விளம்பரப்படுத்தவே செலவிடப்படுகிறது என்பது வேதனை அளிக்கிறது.தமிழக விவசாயிகள், வேளாண் உற்பத்-தியை பெருக்கும் வகையில். நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்கும், தமிழகத்தில் உள்ள நீர் ஆதரங்களை மேம்படுத்தவும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மற்ற மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ததை ஒப்பிடும்போது, தமிழக விவசாயிகளை மாற்-றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய பா.ஜ., அரசு நடத்துவதை கண்டிக்கிறோம். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை, தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்-ளது.

ஆர்.பிரணவ்குமார், கல்வியாளர்: அடுத்து இரண்டு ஆண்டுகளில், 2 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்துவது. உயர்கல்வி பயில, 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்தப்படும். நாடு முழுவதும், 12 மெகா தொழில் பூங்காக்கள் அமைக்கப்-படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட், விவசாயிகள், மாணவர்கள், மகளிர் மற்றும் தொழில் முனைவோர் என அனைவருக்கும் பயன்படும் வகையில் திருப்தி-கரமாக உள்ளது.

பரமத்தி வேலுார் தாலுகா, லாரி அசோசியேஷன் சட்ட ஆலோ-சகர் ஆ.ரா.காந்தி: வேளாண்மை துறைக்கு 1.52 லட்சம் கோடி ஒதுக்கியது. விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலை வாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் கொண்டு வந்தது பாராட்டுக்குரியது. நாடு முழுவதும் மாணவர்க-ளுக்கு கல்வி கடனுக்கான வட்டி ரத்து செய்துள்ளனர். முத்ரா கடன் உதவி திட்டத்தின் கீழ், 10 லட்சமாக இருந்த கடன் உத-வியை, 20 லட்சமாக உயர்த்தி உள்ளனர். மேலும் பெண்கள் திட்-டங்களுக்கு மூன்று லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர். ஏழை, எளிய, பாமர மக்கள், விவசாயிகள் இவர்களுக்கு இந்த பட்ஜெட் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைமை ஆலோசகர் வி.டி.கருணாநிதி: சிறு, குறு, நடுத்தர தொழில்க-ளுக்கும், வேலைவாய்ப்புக்கும் பட்ஜெட்டில் அதிக முக்கியத்-துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், தொழில் வளர்ச்சி ஏற்றம் தரும். தொலைநோக்கு திட்டங்கள் ஏராளமாக உள்ளன. நாட்டின் முன்-னேற்றத்திற்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் உற்பத்தி, வேளாண் உற்பத்தி, நகரப்புற மேம்பாடு உள்ளிட்ட அனைத்து துறைகளும் வளர்ச்சி அடையும் வகையில் முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளதால், சிறப்பான பட்ஜெட்.எம்.முனியப்பன், சமூக ஆர்வலர். ராசிபுரம்: ஆபரண தங்கத்திற்-கான வரி குறைப்பால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாடு முழுவதும், 12 மெகா தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவித்திப்பது வரவேற்கத்தக்கது. முத்ரா கடனை, 10 லட்சம் ரூபாயில் இருந்து, 20 லட்சமாக உயர்த்தியிருப்பது நல்ல பலனை கொடுக்கும். வருமான வரி விதிப்பு நடைமுறையில், மாற்றம் செய்திருப்பது நடுத்தர குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தி-ருக்கிறது. தமிழகத்திற்கு குறிப்பிடும்படி நிதி ஒதுக்காதது வருத்தம் அளிக்கிறது.

டி.எம்.பச்சமுத்து, விவசாயி, மங்களபுரம்: வேளாண் துறைக்கு, 1.5 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதுடன் அடுத்த, 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மை செய்ய விவசா-யிகளுக்கு பயிற்சி அளிப்பது மகிழ்ச்சி. விவசாயத்தில் டிஜிட்டல் முறையை பயன்படுத்த, மாநில அரசுடன் இணைந்து திட்டமிடு-வதும் பெரிய பலன் கொடுக்கும். அரசு திட்டங்களில் பயன்பெ-றாத மாணவர்கள், உள்நாட்டில் கல்வி பயில, ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்குவதாக அறிவித்திருப்பது மாணவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us