/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'கேரி பேக்' பயன்படுத்திய7 கடைகளுக்கு அபராதம் 'கேரி பேக்' பயன்படுத்திய7 கடைகளுக்கு அபராதம்
'கேரி பேக்' பயன்படுத்திய7 கடைகளுக்கு அபராதம்
'கேரி பேக்' பயன்படுத்திய7 கடைகளுக்கு அபராதம்
'கேரி பேக்' பயன்படுத்திய7 கடைகளுக்கு அபராதம்
ADDED : மார் 15, 2025 02:30 AM
'கேரி பேக்' பயன்படுத்திய7 கடைகளுக்கு அபராதம்
ராசிபுரம்:ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, நகராட்சி கமிஷனர் கணேசன் தலைமையில் அதிகாரிகள், நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ராசிபுரம் அண்ணா சாலை, நாமக்கல், சேலம் சாலைகளில் உள்ள, ஏழு கடைகளில், 'கேரி பேக்'குகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைகளில் இருந்த, 50 கிலோ கேரி பேக்குகளை பறிமுதல் செய்து அழித்ததுடன், ஏழு கடைகளுக்கும், 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.