/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'வெப்பநிலை அதிகரிப்பால் மதியம் 12 முதல்3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்' 'வெப்பநிலை அதிகரிப்பால் மதியம் 12 முதல்3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்'
'வெப்பநிலை அதிகரிப்பால் மதியம் 12 முதல்3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்'
'வெப்பநிலை அதிகரிப்பால் மதியம் 12 முதல்3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்'
'வெப்பநிலை அதிகரிப்பால் மதியம் 12 முதல்3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்'
ADDED : மார் 23, 2025 01:27 AM
'வெப்பநிலை அதிகரிப்பால் மதியம் 12 முதல்3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்'
நாமக்கல்:'மாவட்டத்தில் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மதியம், 12:00 முதல், 3:00 மணி வரை, வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் உமா அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கோடை காலம் துவங்கியுள்ளதால், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதனால், பொதுமக்கள் வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். காட்டன் மற்றும் வெளிர் நிற ஆடைகளை உடுத்த வேண்டும். வெளியில் செல்லும்போது தலைக்கு தொப்பி அல்லது குடை, பாதுகாப்பான கூலிங்கிளாஸ் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
பயணங்களின்போது போதுமான குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். உடல் வெப்பத்தை தணிக்க அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, கஞ்சி, கூழ், பழச்சாறு, இளநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ்., கலவை ஆகியவற்றை அருந்த வேண்டும்.
குழந்தைகள், கருவுற்ற பெண்கள், முதியோர் மற்றும் உடல்நலம் குன்றியவர்களை, வெப்பத்தாக்கம் இல்லாத பகுதிகளில் வைத்து பராமரிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப்பணியில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களுக்கு தேவையான அளவிற்கு குடிநீர் வைத்துக்கொள்ள வேண்டும்.
வெயில் பாதிப்பினால் அசதி, தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கறுப்பு மற்றும் அடர்வண்ணம் கொண்ட ஆடைகளை அணியக்
கூடாது. கடும் வெயிலில் குறிப்பாக மதியம், 12:00 மணி முதல், 3:00 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.