ADDED : மார் 28, 2025 01:21 AM
சாலை மேம்படுத்தும் பணி மும்முரம்
மல்லசமுத்திரம்:பருத்திபள்ளியில், சாலை மேம்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.மல்லசமுத்திரம் யூனியன், பருத்திபள்ளி பஸ் நிறுத்தத்தில் மோர்பாளையம், மல்லசமுத்திரம், வையப்பமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை பிரிந்து செல்கிறது. பல்வேறு கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலை என்பதால், தினமும் எண்ணற்ற பள்ளி, கல்லுாரி பஸ்கள், டிப்பர் லாரிகள், கனரக, இலகுரக வாகனங்கள் என எந்நேரமும் சென்று வருகிறது.
பிரிவு சாலையில் ஒருசில இடங்கள் குண்டும், குழியுமாக காட்சியளித்ததால் மக்கள் செல்ல சிரமப்பட்டனர். இதையடுத்து, பருத்திப்பள்ளி பஸ் நிறுத்தத்தில், 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், சாலையை மேம்படுத்தி வடிகால் வசதியுடன் கூடிய புதிய தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


