/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஜாமினில் வந்தவர் 'தேடப்படும் குற்றவாளி' ஜாமினில் வந்தவர் 'தேடப்படும் குற்றவாளி'
ஜாமினில் வந்தவர் 'தேடப்படும் குற்றவாளி'
ஜாமினில் வந்தவர் 'தேடப்படும் குற்றவாளி'
ஜாமினில் வந்தவர் 'தேடப்படும் குற்றவாளி'
ADDED : மார் 20, 2025 01:56 AM
ஜாமினில் வந்தவர் 'தேடப்படும் குற்றவாளி'
மல்லசமுத்திரம்:ராசிபுரம், டி.வி.எஸ்., நகரை சேர்ந்தவர் அவினாசிமணி மகன் மணிகண்டன், 46; இவர் கடந்த, 2001 ஜூலை, 25ல், மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில், கொலை வழக்கு ஒன்றில், இரண்டு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த அவர், இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து மணிகண்டனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, மல்லசமுத்திரம் எஸ்.ஐ., முருகேசன், கோனேரிப்பட்டி வி.ஏ.ஓ., ராஜேஸ்வரி ஆகியோர் டி.வி.எஸ்., நகரின் பொது இடங்களில் நோட்டீஸ் ஒட்டினர்.