/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ உங்களை தேடி உங்கள் ஊரில்திட்டத்தில் 2வது நாளாக ஆய்வு உங்களை தேடி உங்கள் ஊரில்திட்டத்தில் 2வது நாளாக ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில்திட்டத்தில் 2வது நாளாக ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில்திட்டத்தில் 2வது நாளாக ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில்திட்டத்தில் 2வது நாளாக ஆய்வு
ADDED : மார் 28, 2025 01:37 AM
உங்களை தேடி உங்கள் ஊரில்திட்டத்தில் 2வது நாளாக ஆய்வு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலத்தில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கலெக்டர் உமா நேற்று இரண்டாவது நாளாக பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.
சேந்தமங்கலம், அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் மாணவர்களுக்கான உணவு, குடிநீர், படுக்கை மற்றும் கழிப்பறை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். மேலும், சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் நோயாளி
கள் வருகை விபரங்கள் கேட்டறிந்ததார். இதையடுத்து, வடுகப்பட்டி பஞ்., நடுநிலைப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு, உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். அக்கியம்பட்டி குடியிருப்பு பகுதியில், குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை பார்வையிட்டு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பெண்களிடம் அறிவுரை வழங்கினார்.


