/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல் அரசு கல்லுாரியில் ஆண்டு விழா நாமக்கல் அரசு கல்லுாரியில் ஆண்டு விழா
நாமக்கல் அரசு கல்லுாரியில் ஆண்டு விழா
நாமக்கல் அரசு கல்லுாரியில் ஆண்டு விழா
நாமக்கல் அரசு கல்லுாரியில் ஆண்டு விழா
ADDED : மார் 28, 2025 01:39 AM
நாமக்கல் அரசு கல்லுாரியில் ஆண்டு விழா
நாமக்கல்:நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் மாணவ, மாணவியருக்கான விளையாட்டு விழா மற்றும் கல்லுாரி ஆண்டு விழா நடந்தது.
முதல்வர் ராஜா தலைமை வகித்தார். நாமக்கல் கலெக்டர் உமா பேசுகையில்,' மாணவ, மாணவியர் தமிழக அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பயன்படுத்தி, நன்முறையில் பெற்றோரை மட்டுமே கண்முன் வைத்து, நன்றாக படித்து மென்மேலும் உயர வேண்டும்,' என்றார். தொடர்ந்து பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கினார். விலங்கியல் துறைத்தலைவர் ராஜசேகர பாண்டியன், தாவரவியல் துறைத்தலைவர் ராஜேஸ்வரி, தமிழ்த்துறை தலைவர் கந்தசாமி, வரலாற்று துறைத்தலைவர் (பொ) சந்திரசேகரன், புள்ளியியல் துறைத்தலைவர் சுஜாதா மற்றும் பலர் பங்கேற்றனர்.


