/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ செல்வம் கல்வி நிறுவன தலைவருக்கு அஞ்சலி செல்வம் கல்வி நிறுவன தலைவருக்கு அஞ்சலி
செல்வம் கல்வி நிறுவன தலைவருக்கு அஞ்சலி
செல்வம் கல்வி நிறுவன தலைவருக்கு அஞ்சலி
செல்வம் கல்வி நிறுவன தலைவருக்கு அஞ்சலி
ADDED : மார் 28, 2025 01:38 AM
செல்வம் கல்வி நிறுவன தலைவருக்கு அஞ்சலி
நாமக்கல்:நாமக்கல், செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவரான டாக்டர் செல்வராஜ், சிறு வயது முதல் கோழிப்பண்ணயில் விருப்பம் கொண்டார். அதனால் சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரியில் பிவிஎஸ்சி பட்டம் பெற்றார். டாக்டர் பி.வி. ராவுடன் நெருக்கமாக பணியாற்றினார். கோழி வளர்ப்பு வளர்ச்சியில், நாட்டின் புகழ் பெற்ற மனிதர்களில் ஒருவர். இந்தியாவிலும், உலக அளவிலும் நாமக்கல்லை முட்டை நகரமாக உருவாக்குவதில் வெற்றி கண்டார்.
நாமக்கல்லுக்கு, கால்நடை மருத்துவக் கல்லுாரி தேவை என்பதை அடையாளம் கண்டு நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். நாமக்கல் ரோட்டரி சங்க பட்டய தலைவராகவும், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தமிழ்நாடு மண்டலத்தின் தலைவராகவும் பணியாற்றினார். கல்வியிலும் சேவை செய்யும் விதமாக தனது தந்தையின் பெயரில் பொன்னுச்சாமி அறக்கட்டளை என்ற பெயரில், செல்வம் கல்வி நிறுவனங்களை உருவாக்கி கலை கல்லுாரி தொடங்கி சாதனை படைத்து, பின்பு இன்ஜினியர் மாணவர்களை உருவாக்கும் நோக்கத்தில்,  பொறியியல் கல்லுாரியை தொடங்கினார். செயலாளர் கவித்ரா நந்தினி,  செயல் இயக்குனர் கார்த்திக் மற்றும் அனைவரது முயற்சியில்  அட்டனம்ஸ் கல்லுாரியாக சில ஆண்டுகளுக்கு முன்னதாக வாங்கினர். சீரிய உழைப்பில் பல வெற்றிகளை செய்து இந்த உலகை விட்டு மறைந்துள்ளார். இவருக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.


