/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ராசிபுரம் உழவர் சந்தையில்பழங்கள் விற்பனை அதிகரிப்பு ராசிபுரம் உழவர் சந்தையில்பழங்கள் விற்பனை அதிகரிப்பு
ராசிபுரம் உழவர் சந்தையில்பழங்கள் விற்பனை அதிகரிப்பு
ராசிபுரம் உழவர் சந்தையில்பழங்கள் விற்பனை அதிகரிப்பு
ராசிபுரம் உழவர் சந்தையில்பழங்கள் விற்பனை அதிகரிப்பு
ADDED : மார் 23, 2025 01:26 AM
ராசிபுரம் உழவர் சந்தையில்பழங்கள் விற்பனை அதிகரிப்பு
ராசிபுரம்:ராசிபுரம் உழவர் சந்தைக்கு நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி என மாவட்டத்தின் எல்லையில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
அதேபோல் ராசிபுரம், வெண்ணந்துார் ஒன்றியத்தில் இருந்தும் விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். விடுமுறை தினமான நேற்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது.
நேற்றைய உழவர் சந்தையில் தக்காளி கிலோ, 12 ரூபாய், கத்தரி, 35, வெண்டை, 35, புடலை, 25, பீர்க்கன்காய், 35, பாகல், 35, சுரைக்காய், 10, பச்சை மிளகாய், 38, முருங்கை, 30, சின்ன வெங்காயம், 45, பெரிய வெங்காயம், 38, முட்டைகோஸ், 18, கேரட், 60, பீன்ஸ், 60, பீட்ரூட், 35 ரூபாய்க்கு விற்பனையானது. கொய்யா, 50, பப்பாளி, 30,
தர்பூசணி, 20, விலாம்பழம், 48 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று, 231 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 29 ஆயிரத்து, 400 கிலோ காய்கறி, 8,735 கிலோ பழங்கள், 440 கிலோ பூக்கள் என மொத்தம், 38 ஆயிரத்து, 575 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகியுள்ளது.
இதன் மொத்த மதிப்பு, 13.7 லட்சம் ரூபாய். 7,689 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
கடந்த வாரத்தை விட பழங்கள் அதிகளவு விற்றுள்ளது. கடந்த வாரம், 7,000 கிலோ பழங்கள் மட்டுமே விற்பனையானது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், நேற்று ராசிபுரம் உழவர் சந்தையில் பழங்கள் விற்பனை அதிகரித்து, 8,735 கிலோ பழங்கள் விற்பனையாயின.