/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குடிநீர் வழங்கும் பணிநகராட்சி தலைவர் ஆய்வு குடிநீர் வழங்கும் பணிநகராட்சி தலைவர் ஆய்வு
குடிநீர் வழங்கும் பணிநகராட்சி தலைவர் ஆய்வு
குடிநீர் வழங்கும் பணிநகராட்சி தலைவர் ஆய்வு
குடிநீர் வழங்கும் பணிநகராட்சி தலைவர் ஆய்வு
ADDED : மார் 23, 2025 01:24 AM
குடிநீர் வழங்கும் பணிநகராட்சி தலைவர் ஆய்வு
பள்ளிப்பாளையம்:சமயசங்கிலி தடுப்பணை நீர் தேக்கம் பகுதியில் இருந்து, பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் பணியை, நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
பள்ளிப்பாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இதிலிருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு, நகராட்சி பகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த, 5ம் தேதி சமயசங்கிலி தடுப்பணை வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடந்ததால், நீர் தேக்கம் பகுதியில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று முதல், (23 தேதி) மீண்டும் சமயசங்கிலி தடுப்பணை நீர் தேக்கத்தில் முழுமையாக தண்ணீர் தேக்கப்படுகிறது.
இதையடுத்து, சுத்திகரிப்பு செய்யும் நீரேற்று நிலையத்தில், மோட்டார்களில் சக்கை, குப்பை சிக்காமல் இருப்பதற்காக தண்ணீர் உறிஞ்சும் பகுதியை சுற்றிலும், புதிய முயற்சியாக ரயான் கயிற்றை கொண்டு வலை கட்டும் பணிகள் நடந்தது. இதை நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது கமிஷனர் தயாளன், பொறியாளர் ரேணுகா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.