ADDED : மார் 20, 2025 01:38 AM
உலக காச நோய் தின கருத்தரங்கு
குமாரபாளையம்:உலக காச நோய் தினத்தையொட்டி, குமாரபாளையம் அன்னை ஜே.கே.கே.சம்பூரணி அம்மாள் மருந்தாளுனர் கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், உலக காச நோய் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி தலைவர் வசந்தகுமாரி முனிராஜா, தாளாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட காச நோய் திட்ட ஒருங்கிணைப்பாளர் கபில், காசநோய் பரவும் விதமும், முன்னெச்சரிக்கையாக தடுக்கும் விதம் குறித்தும் பேசினார். குமாரபாளையம் அரசு மருத்துவமனை காசநோய் டாக்டர் அருள்மணி, காசநோய் பரிசோதனை மற்றும் அதற்கு பயன்படுத்தும் மருந்துகள் குறித்து பேசினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சதீஷ்குமார், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.