/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வேணுகோபால் சுவாமிபுஷ்ப பல்லக்கில் ஊர்வலம் வேணுகோபால் சுவாமிபுஷ்ப பல்லக்கில் ஊர்வலம்
வேணுகோபால் சுவாமிபுஷ்ப பல்லக்கில் ஊர்வலம்
வேணுகோபால் சுவாமிபுஷ்ப பல்லக்கில் ஊர்வலம்
வேணுகோபால் சுவாமிபுஷ்ப பல்லக்கில் ஊர்வலம்
ADDED : மார் 14, 2025 02:05 AM
வேணுகோபால் சுவாமிபுஷ்ப பல்லக்கில் ஊர்வலம்
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை, வேணுகோபால் சுவாமி நேற்று புஷ்ப பல்லக்கில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாமகிரிப்பேட்டையில், வரலாற்று சிறப்பு மிக்க வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில்கள் உள்ளன. இதில், காசி விஸ்வாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
வேணுகோபால் சுவாமி கோவிலில், மாசி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா திங்கட்கிழமை அதிகாலை, 4:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. செவ்வாய்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று இரவு சத்தாபரணம் நிகழ்ச்சியில், வேணுகோபால் சுவாமி புஷ்ப பல்லக்கில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.