/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தேடப்படும் குற்றவாளி: போலீசார் அறிவிப்பு தேடப்படும் குற்றவாளி: போலீசார் அறிவிப்பு
தேடப்படும் குற்றவாளி: போலீசார் அறிவிப்பு
தேடப்படும் குற்றவாளி: போலீசார் அறிவிப்பு
தேடப்படும் குற்றவாளி: போலீசார் அறிவிப்பு
ADDED : மார் 14, 2025 01:53 AM
தேடப்படும் குற்றவாளி: போலீசார் அறிவிப்பு
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம், வையப்பமலை அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ள நபரை, எலச்சிபாளையம் போலீசார் தேடப்படும் தலை
மறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளனர். மல்லசமுத்திரம் அருகே, அத்திக்காடு துத்திபாளையம் பகுதியை
சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ரவி என்ற ரவிக்குமார். இவர், கடந்த நவ.,28, 2007ல், வையப்பமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கம்ப்யூட்டர் மற்றும் அதன் சர்வரை திருடி சென்றார். அதேபோல், 2007 டிச.,23ல், எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா, 'டிவி', டேப் ரெக்கார்டர் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றார்.
எலச்சிபாளையம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின், ஜாமினில் வெளியே வந்தவர் இதுவரை, திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். இவரை, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக எலச்சிபாளையம் போலீசார் அறிவித்துள்ளனர்.