Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கியூட் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்புமாணவர்கள் வரவேற்

கியூட் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்புமாணவர்கள் வரவேற்

கியூட் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்புமாணவர்கள் வரவேற்

கியூட் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்புமாணவர்கள் வரவேற்

ADDED : மார் 23, 2025 01:29 AM


Google News
கியூட் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்புமாணவர்கள் வரவேற்பு

ராசிபுரம்:மத்திய பல்கலை கழகங்களில் சேர்வதற்கான கியூட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள, 46 மத்திய பல்கலை கழகங்கள் உள்பட மாநில பல்லைகழகங்கள், நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம், 250க்கும் மேற்பட்டவைகளில் உயர்கல்வி படிப்பதற்கான நுழைவுத்தேர்வு, காமன் யுனிவர்சிட்டி என்டரன்ஸ் டெஸ்ட் (கியூட்) என்ற பெயரில் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சீஸ் நடத்தி வருகிறது.

இந்த தேர்வு மூலம் இளநிலையிலான கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளிலும் மாணவர்கள் சேர முடியும்.

இந்தியா முழுவதும், மூன்று லட்சம் இடங்களுக்கு ஆண்டுதோறும், 13 லட்சம் முதல், 15 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான கியூட் நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் மார்ச் 1ம் தேதி தொடங்கியது. 22ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்களின் ஆதார் அட்டையில் உள்ள பெயர்களும், 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் உள்ள பெயரும் பலருக்கு வெவ்வேறாக இருந்தது.

அப்படியிருக்கும் மாணவர்கள் இரண்டு, மூன்று முறை முயற்சி செய்தால்தான் ஆதாரில் உள்ள பெயர் என்ற விண்டோ வருகிறது.

இதனால், விண்ணப்பிப்பதில் காலதாமதமாகியது. அதேபோல், இமெயில், மொபைல் எண்ணக்கு வெரிபிகேஷன் ஓடிபியும் சில நாட்களாக சரியாக வருவதில்லை. இதனாலும் கிராமத்து மாணவர்கள் கியூட் விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில், விண்ணப்பிக்கும் தேதி மார்ச், 22லிருந்து, 24ம் தேதி இரவு, 11:50 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பணம் செலுத்துவது, 23ம் தேதியில் இருந்து, 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விண்ணப்பத்தில் தவறு இருந்தால் அதை திருத்துவதற்கான விண்டோ, 26ம் தேதியில் இருந்து, 28ம் தேதி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தேதி நீட்டிப்பு செய்திருப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது என மாணவர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us