/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு அரசு ஊழிய கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு அரசு ஊழிய
கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு அரசு ஊழிய
கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு அரசு ஊழிய
கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு அரசு ஊழிய
ADDED : மார் 19, 2025 01:06 AM
கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு அரசு ஊழியர் பலி
ராசிபுரம்:ராசிபுரம் ஒன்றியம், சிங்களாந்தபுரம் மேற்கு தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் நடேசன், 68; இவர், டெபுட்டி பி.டி.ஓ.,வாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று மாலை, சிங்களாந்தபுரத்திற்கு சைக்கிளில் சென்ற நடேசன் திரும்பி வரவில்லை. அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நடேசன் சென்ற வழியில் இருந்த விவசாய கிணற்றில் பார்த்தபோது, சைக்கிளுடன் நடேசன் விழுந்து கிடந்தது தெரிந்தது. இதுகுறித்து, ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர், ஒரு மணிநேரம் போராடி நடேசன் உடலை மீட்டனர். பேளுக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.