/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மெட்ரிக், சி.பி.எஸ்.இ., தேர்வுகளில் எஸ்.ஆர்.வி., ஆண்கள் பள்ளி அபாரம் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., தேர்வுகளில் எஸ்.ஆர்.வி., ஆண்கள் பள்ளி அபாரம்
மெட்ரிக், சி.பி.எஸ்.இ., தேர்வுகளில் எஸ்.ஆர்.வி., ஆண்கள் பள்ளி அபாரம்
மெட்ரிக், சி.பி.எஸ்.இ., தேர்வுகளில் எஸ்.ஆர்.வி., ஆண்கள் பள்ளி அபாரம்
மெட்ரிக், சி.பி.எஸ்.இ., தேர்வுகளில் எஸ்.ஆர்.வி., ஆண்கள் பள்ளி அபாரம்
ADDED : மே 20, 2025 02:37 AM
ராசிபுரம், மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியாகின. இதில், ராசிபுரம் எஸ்.ஆர்.வி., மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
பிளஸ் 2 மாணவி சுபிக்ஷ், 595 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவர் விஜயஸ்ரீராம், 592 மதிப்பெண் பெற்று, 2ம் இடம், மாணவி கோபிகா, 591 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்தனர்.
பிளஸ் 1 தேர்வில், மாணவர்கள் கோபிகா, 594, தனிஷ்கா தேவி, 586, ஸ்ரீவிஷ்னு, 582 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி வைஷிகா, 492, மாணவர்கள் ஸ்ரீவர்ஷன், கவிநயா, இதன்யா ஆகியோர், 488 மதிப்பெண், கிரண், 487 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர் அக்ஷத், 500க், 481 மதிப்பெண் பெற்று முதலிடம், ஹரிஹர சுதன், 475, சுபாஸ்ரீ, 470 மதிப்பெண் பெற்றனர். பத்தாம் வகுப்பில், மாணவர் ஹரீஷ், 497, ஹனிருதா, 491, நிகில் பூபதி, 489 மதிப்பெண் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகிகள் குமரவேல், ராமசாமி, சுவாமிநாதன், செல்வராசன், துரைசாமி, ராமசாமி, சத்தியமூர்த்தி மற்றும் பள்ளி முதல்வர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.