/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கட்சியினர் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கட்சியினர்
உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கட்சியினர்
உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கட்சியினர்
உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கட்சியினர்
ADDED : ஜூன் 16, 2024 12:48 PM
பள்ளிப்பாளையம்: லோக்சபா தேர்தல் முடிந்து விட்டது. அதில், அரசியல் கட்சியினர் பெற்ற ஓட்டுகள் அடிப்படையில், தேர்தல் வியூகம் அமைத்து அடுத்து வரவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சியினரும் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, பள்ளிப்பாளையம் யூனியன் பகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க.,வினர், தங்கள் கட்சி பெற்ற ஓட்டுகள் அடிப்படையில் வியூகம் வகுத்து வருகின்றனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு தான், அடுத்து வரும், 2026 சட்டசபை தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்புக்கு அடிப்படையாக அமையும் என்பதால், தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்தாண்டு இறுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என, தெரிகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்துவரை, அந்தந்த பகுதியில் கட்சி ஓட்டு, மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களே வார்டு கவுன்சிலர், பஞ்., தலைவராக வெற்றி பெறுகின்றனர். அந்த வகையில், பள்ளிப்பாளையம் யூனியனில் பூத் வாரியாக அரசியல் கட்சியினர், லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டுகளை கணக்கிட்டு தங்கள் கட்சிக்கான ஓட்டுகளை குறையாமல் தக்க வைத்துக்கொள்ள கவனம் செலுத்தி வருகின்றனர்.