/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தேசிய பசுமை படை சார்பில் நாமக்கல்லில் துாய்மை பணி தேசிய பசுமை படை சார்பில் நாமக்கல்லில் துாய்மை பணி
தேசிய பசுமை படை சார்பில் நாமக்கல்லில் துாய்மை பணி
தேசிய பசுமை படை சார்பில் நாமக்கல்லில் துாய்மை பணி
தேசிய பசுமை படை சார்பில் நாமக்கல்லில் துாய்மை பணி
ADDED : மார் 14, 2025 02:03 AM
தேசிய பசுமை படை சார்பில் நாமக்கல்லில் துாய்மை பணி
நாமக்கல்:நாமக்கல், புது பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சிக்கு தேசிய பசுமை படை அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் கலாநிதி தலைமை வகித்து, பசுமை உறுதிமொழி வாசித்து துாய்மை பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு மஞ்சப்பை வழங்கி, மீண்டும் மஞ்சப்பை திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் பச்சமுத்து (தொடக்கக்கல்வி), ஜோதி (மெட்ரிக் பள்ளிகள்), மாநகராட்சி துணை மேயர் பூபதி, சுகாதார ஆய்வாளர் திருமூர்த்தி உள்ளிட்டோர் பசுமை குறித்து பேசினர். மேலும் பசுமை படை மாணவர்கள், 250 கிலோ அளவிற்கான பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்து மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.