/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொல்லிமலை அருவிகளில் சுற்றுலா பயணியர் உற்சாகம் கொல்லிமலை அருவிகளில் சுற்றுலா பயணியர் உற்சாகம்
கொல்லிமலை அருவிகளில் சுற்றுலா பயணியர் உற்சாகம்
கொல்லிமலை அருவிகளில் சுற்றுலா பயணியர் உற்சாகம்
கொல்லிமலை அருவிகளில் சுற்றுலா பயணியர் உற்சாகம்
ADDED : ஜூன் 17, 2024 01:31 AM
சேந்தமங்கலம்: தொடர் விடுமுறையால், நேற்று கொல்லிமலையில் குவிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை மூலிகை நிறைந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இதுபோல், வரும் சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மருவிகளில் குளித்து மகிழ்வர். இதை தொடர்ந்து, அங்குள்ள அரப்பளீஸ்வரர் கோவில், எட்டிக்கையம்மன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு, படகு இல்லம், சித்தர்கள் வாழ்ந்த குகைகளை பார்த்து விட்டு செல்வர்.
இந்நிலையில், இந்த வாரம், சனி, ஞாயிறு மற்றும் பக்ரீத் பண்டிகையால், திங்கள் விடுமுறை என, 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால், நேற்று கொல்லிமலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.