/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/ மத்திய அரசுக்கு எதிராக விஜய் குரல் இல்லை மா.கம்யூ., பாலகிருஷ்ணன் கேள்வி மத்திய அரசுக்கு எதிராக விஜய் குரல் இல்லை மா.கம்யூ., பாலகிருஷ்ணன் கேள்வி
மத்திய அரசுக்கு எதிராக விஜய் குரல் இல்லை மா.கம்யூ., பாலகிருஷ்ணன் கேள்வி
மத்திய அரசுக்கு எதிராக விஜய் குரல் இல்லை மா.கம்யூ., பாலகிருஷ்ணன் கேள்வி
மத்திய அரசுக்கு எதிராக விஜய் குரல் இல்லை மா.கம்யூ., பாலகிருஷ்ணன் கேள்வி
ADDED : செப் 24, 2025 03:49 AM
நாகப்பட்டினம்:''தமிழக அரசை மட்டும் விமர்சிக்கும் விஜய், தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்காதது ஏன்,'' என, மார்க்சிஸ்ட் கம்யூ., பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., வரி குறைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய தீபாவளி பரிசு அளித்திருப்பதாக பிரதமர் கூறியுள்ளார். சிறிய அளவிலான வரி குறைப்புக்கு தம்பட்டம் அடிக்க வேண்டியதில்லை.
கடந்த ஓராண்டில் மட்டும் ஜி.எஸ்.டி., மூலம் 22 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது என்றால், கடந்த 11 ஆண்டுகளில் மக்கள் பணம் எவ்வளவு கொள்ளையடிக்கப்பட்டது. அதற்கு யார் பொறுப்பேற்பது. தற்போது 46 ஆயிரம் கோடி ரூபாய் வரி குறைக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் கூறுகிறார்.
இந்த வரி குறைப்பு மக்களுக்கு நேரடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.
த.வெ.க., கொள்கை என்ன? ஆணவப் படுகொலைகள், ஜாதிய தாக்குதல்களில் த.வெ.க., நிலைப்பாட்டை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். இதையெல்லாம் கூறாமல் தி.மு.க., ஆட்சியை மட்டும் விமர்சிக்கும் விஜய், பா.ஜ., அரசை ஏன் விமர்சனம் செய்யவில்லை.
தமிழகத்துக்கான நிதி மறுப்பது, திட்டங்களை கிடப்பில் போடும் மத்திய அரசுக்கு எதிராக விஜய் ஏன் குரல் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.