/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/ 'அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சு' தி.மு.க., மீது பாலகிருஷ்ணன் ஆதங்கம் 'அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சு' தி.மு.க., மீது பாலகிருஷ்ணன் ஆதங்கம்
'அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சு' தி.மு.க., மீது பாலகிருஷ்ணன் ஆதங்கம்
'அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சு' தி.மு.க., மீது பாலகிருஷ்ணன் ஆதங்கம்
'அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சு' தி.மு.க., மீது பாலகிருஷ்ணன் ஆதங்கம்
ADDED : மே 21, 2025 02:12 AM
நாகப்பட்டினம்:தி.மு.க., எதிர்கட்சியாக இருக்கும்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த வழக்கு போட்டது. இப்போது காரணம் கூறுகிறது என, மா.கம்யூ., மத்தியக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஆதங்கப்பட்டார்.
நாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் அவர் கூறியது:
பஹல்காம் தாக்குதலில் பா.ஜ., வெறுப்பு அரசியல் செய்கிறது. இது வன்மையாக கண்டனத்துக்குறியது. உயர் ராணுவ அதிகாரிகளையும், வெளியுறவுத் துறை செயலர் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புகின்றனர். மத்திய அரசு 2 முறை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியது. இரு முறையும் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. நாட்டு மக்கள் ஒன்றாக உள்ள நிலையில் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில், உள்நாட்டில் வெறுப்பு அரசியலை பா.ஜ., செய்வது கண்டிக்கதக்கது.
தமிழத்தில் உள்ளாட்சிகளின் பதவி கடந்த ஜன., 5 ம் தேதியோடு முடிவடைந்துள்ளது. பதவிகள் முடிவற்ற 28 மாவட்டங்களிலும் உடன் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
பதவிக்காலம் முடிவடைந்தால் 6 மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். கடந்த 2017 - 2018 ம் ஆண்டு, அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போட்டது. புதிய மாவட்டங்கள் பிரிப்பு, தொகுதி வரையறை என அ.தி.மு.க., காரணம் கூறியது. இதை எதிர்த்து, தி.மு.க., வழக்கு தொடர்ந்தது. 9 மாவட்டங்களுக்கு மட்டும் பின்னால் நடத்தலாம். மீதமுள்ள 28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால், தற்போது நகராட்சி, மாநகராட்சி வார்டு வரைமுறை நடக்கிறது என தி.மு.க., கூறுகிறது. சட்டசபை தேர்தலுக்கு பின்தான் உள்ளாட்சிக்கு தேர்தல் நடக்கும் நிலை உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தாமதத்தால் நிர்வாகத்தில் 50 சதவீதம் பெண்களுக்கு பதவி கிடைக்க வாய்ப்பில்லாமல் போகும். உள்ளாட்சியில் அதிகாரிகள் நிர்வாகத்தில் அடிதட்டு மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும். ஊழலுக்கு தான் வழி வகுக்கும்.
18 மாவட்டங்களில் தனிநபர் வருமானம் மிக குறைவு என புள்ளி விபரம் கூறுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மிக குறைவு. இந்நிலையில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி கூட்ட கூடாது.
இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.