/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/ பெண் வெட்டிக்கொலை மர்ம நபருக்கு வலை பெண் வெட்டிக்கொலை மர்ம நபருக்கு வலை
பெண் வெட்டிக்கொலை மர்ம நபருக்கு வலை
பெண் வெட்டிக்கொலை மர்ம நபருக்கு வலை
பெண் வெட்டிக்கொலை மர்ம நபருக்கு வலை
ADDED : ஆக 02, 2024 09:25 PM
நாகப்பட்டினம்:நாகை, வெளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஈஸ்வரி, 41; கணவரை இழந்த இவர், இட்லி கடை நடத்திக்கொண்டு தன், 8 வயது மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர், ஈஸ்வரியை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றார். அக்கம்பக்கத்தினர் ஈஸ்வரியை மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.