/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/ ரூ.150 கோடி போதை பொருள் சிக்கியது; 2 பேர் கைது ரூ.150 கோடி போதை பொருள் சிக்கியது; 2 பேர் கைது
ரூ.150 கோடி போதை பொருள் சிக்கியது; 2 பேர் கைது
ரூ.150 கோடி போதை பொருள் சிக்கியது; 2 பேர் கைது
ரூ.150 கோடி போதை பொருள் சிக்கியது; 2 பேர் கைது
ADDED : ஜூன் 15, 2024 02:00 AM

வேளாங்கண்ணி:சர்வதேச போதைப் பொருளான ஹாசிஸ் மேற்கு வங்கத்தில் இருந்து நாகை துறைமுகம் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக, நாகை 'கியூ' பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார், வேளாங்கண்ணியில் தங்கியிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரிடம் விசாரித்தனர்.
அவர்கள் மேற்கு வங்கம், டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்த சுனித் கவாஸ், 39, தில் குமார் தாபா மங்கர், 34, என்பதும், இருவரும் ராமேஸ்வரம் மற்றும் வேளாங்கண்ணி தேவாலய தரிசனத்திற்காக வந்ததாகக் கூறினர். சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் வந்த காரை சோதனையிட்டனர். காரில் ரகசிய அறை தயார் செய்து, 75 கிலோ ஹாசிஸ் போதைப்பொருள் பதுக்கியிருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு, 150 கோடி ரூபாய்.
தொடர் விசாரணையில், இருவரும், தேனியைச் சேர்ந்தவருக்காக கடத்தி வந்ததும், அந்த நபர் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், இதில் தொடர்புடையவர்களை தேடுகின்றனர்.