/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு அரசு கொள்முதல் செய்ய கோரிக்கைபொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை
பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை
பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை
பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை
ADDED : ஜன 02, 2024 11:23 PM

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொங்கல் செங்கரும்பை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை தாலுகா பட்டவர்த்தி, அச்சுதராயபுரம், குத்தாலம் தாலுகா வானாதிராஜபுரம், சேன்டிருப்பு, செருதியூர், சீர்காழி தாலுகா அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, ராதாநல்லூர், பள்ளக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பாரம்பரியமாக செங்கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கி வருகிறது.
அதில் பொங்கல் தயாரிப்பதற்கான பொருட்களுடன், செங்கரும்பையும் சேர்த்து வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு தமிழக அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன் மயிலாடுதுறை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்பை நேரில் ஆய்வு செய்த பின்னர் கொள்முதல் செய்யப்பட்டது.
அரசு பொங்கல் தொகுப்பிற்காக கொள்முதல் செய்ததால், இப்பகுதி விவசாயிகள் இவ்வாண்டு 700 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். கடன் வாங்கி கரும்பு ஒன்றுக்கு ரூ.15 செலவு செய்து 10 மாதங்கள் வளர்த்தெடுத்த செங்கரும்பு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொங்கல் தொகுப்பு குறித்தும், செங்கரும்பு கொள்முதல் குறித்தும் தமிழக அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடாததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சில விவசாயிகள் கடனை அடைப்பதற்காக ஆங்காங்கே கரும்பை கூறுகட்டி அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்ய தொடங்கிஉள்ளனர்.
தமிழக அரசு, பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு கொள்முதல் செய்ததால் உரிய விலை கிடைத்து மகிழ்ச்சி அடைந்திருந்த விவசாயிகள் இவ்வாண்டு பொங்கல் தொகுப்பு குறித்து அறிவிப்பு வராததால் பெரும் நஷ்டம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்படுவோம் என வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, தமிழக அரசு உடனடியாக பொங்கல் பண்டிகைக்கு கரும்பை கொள்முதல் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.