/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/சீர்காழி அருகே மணல் குவாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்சீர்காழி அருகே மணல் குவாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
சீர்காழி அருகே மணல் குவாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
சீர்காழி அருகே மணல் குவாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
சீர்காழி அருகே மணல் குவாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஆக 05, 2024 04:25 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாளி ஏரியில், சீர்காழி பகுதியை சேர்ந்த சில விவசாயிகள், அனுமதி பெற்று வண்டல் மண் எடுக்கத் தொடங்கினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் முறையாக அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக, ராட்சத இயந்திரம் மூலம் ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மண் எடுத்து வியாபாரம் செய்கின்றனர்.
இந்நிலையில் இன்று மணல் ஏற்றி வந்த டிராக்டர் மோதியதில் சைக்களில் சென்றவர் காயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த காரைமேடு ஊராட்சிக்கு உட்பட்ட மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திருவாளி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார், நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தொடர்ந்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி- பூம்புகார் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் குவாரியை மூடினர். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.