Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/அறுவைச் சிகிச்சைக்கு பின் சிறுவன் சாவு மருத்துவமனையை கண்டித்து மறியல்

அறுவைச் சிகிச்சைக்கு பின் சிறுவன் சாவு மருத்துவமனையை கண்டித்து மறியல்

அறுவைச் சிகிச்சைக்கு பின் சிறுவன் சாவு மருத்துவமனையை கண்டித்து மறியல்

அறுவைச் சிகிச்சைக்கு பின் சிறுவன் சாவு மருத்துவமனையை கண்டித்து மறியல்

ADDED : ஜன 31, 2024 01:27 AM


Google News
Latest Tamil News
மயிலாடுதுறை:தனியார் மருத்துவமனையில் குடல்வால் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிறுவன் மரணம் அடைந்ததைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மேலமங்கநல்லூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்.

இவரது மகன் கிஷோர், 12. ஏழாம் வகுப்பு படித்தான். சமீபத்தில் அவனுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. மயிலாடுதுறை பட்டமங்கலம் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பரிசோதித்த டாக்டர்கள், சிறுவனுக்கு குடல்வால் உருவாகி இருப்பதால் உடனே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்.

நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு கிஷோருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின், நீண்ட நேரமாக மயக்க நிலையில் இருந்ததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் விசாரித்தனர்.

கிஷோரை பரிசோதித்த டாக்டர்கள் செயற்கை சுவாசம் அளித்த நிலையில், சிறுவன் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து சாலை மறியல் நடத்தினர்.

இதனால் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தாசில்தார் சபிதா தேவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் உடற்கூறு ஆய்வு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

கிஷோர் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us