/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/பூம்புகாரில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 14ம் ஆண்டு துவக்க விழாபூம்புகாரில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 14ம் ஆண்டு துவக்க விழா
பூம்புகாரில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 14ம் ஆண்டு துவக்க விழா
பூம்புகாரில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 14ம் ஆண்டு துவக்க விழா
பூம்புகாரில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 14ம் ஆண்டு துவக்க விழா
ADDED : ஜன 05, 2024 06:00 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பூம்புகார் மீனவர் கிராமத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 14ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சவுமியா சுவாமிநாதன் மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி பேசியதாவது: சுனாமிக்கு பிறகு கடலோர பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மீனவர்களுக்காக செல்போனில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு தரவுகள் மேம்படுத்தப்பட்டு அதன் மூலம் மீனவர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக சோலார் மீன் உளர்த்தும் கலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மீனவப் பெண்கள் எளிமையான முறையில் மீன்களை உலர்த்தி மதிப்பு கூட்டு பொருளாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத நிலையில் விற்பனை செய்ய முடியும். அதே போல் மீனவ பெண்களுக்கு என தனி உதவி மையம் அறிவிக்கப்பட்டு அதற்கான எண்களும் இன்று வழங்கப்பட்டுள்ளது. மீன் விற்பனை மற்றும் மதிப்பு கூட்டு பொருள்கள் குறித்து சந்தேகம் இருந்தால் மேற்கண்ட எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
தற்போதைய சூழலில் பருவநிலை மாற்றம் மற்றும் கடல் மாசுபாடு காரணமாக கடலில் மீன்வளம் குறைந்து வருகிறது. குறிப்பாக பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் அதிகரித்ததால் பயன்பாடு அற்ற இந்த பொருட்கள் அதிகமாக கடலில் சேர்ந்து மீன்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதே நேரம் அந்த மீன்களை உண்பதால் சுற்றியுள்ள அனைவருக்கும் அதன் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை பொதுமக்கள் பெருமளவு குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.