/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ பூச்சி மருந்து கலந்த மதுவை குடித்தவர் பலி பூச்சி மருந்து கலந்த மதுவை குடித்தவர் பலி
பூச்சி மருந்து கலந்த மதுவை குடித்தவர் பலி
பூச்சி மருந்து கலந்த மதுவை குடித்தவர் பலி
பூச்சி மருந்து கலந்த மதுவை குடித்தவர் பலி
ADDED : ஜூலை 10, 2024 08:46 PM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த பில்லாவிடந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிபாசு, 32; மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி சசிகலா கோவையில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
இதனால் மனமுடைந்த ஜோதிபாசு நேற்று முன்தினம் காரைக்கால் நல்லாத்துாரில் உள்ள மதுக்கடையில் மதுபானம் மற்றும் பூச்சி மருந்து வாங்கி, வீட்டிற்கு வந்து, மது பாட்டிலில் பூச்சி மருந்தை கலந்து குடித்து பாதி வைத்திருந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த அவரது நண்பர் ஜெரால்டு, 24, ஜோதிபாசு சொல்லியும் கேட்காமல் பூச்சி மருந்து கலந்த மது பானத்தை குடித்தார். தகவலறிந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெரால்டு இறந்தார். ஜோதிபாசுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.