/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ சித்தர் காடு நவீன அரிசி ஆலை தற்காலிகமாக நிறுத்தம் சமாதான கூட்டத்தில் முடிவு சித்தர் காடு நவீன அரிசி ஆலை தற்காலிகமாக நிறுத்தம் சமாதான கூட்டத்தில் முடிவு
சித்தர் காடு நவீன அரிசி ஆலை தற்காலிகமாக நிறுத்தம் சமாதான கூட்டத்தில் முடிவு
சித்தர் காடு நவீன அரிசி ஆலை தற்காலிகமாக நிறுத்தம் சமாதான கூட்டத்தில் முடிவு
சித்தர் காடு நவீன அரிசி ஆலை தற்காலிகமாக நிறுத்தம் சமாதான கூட்டத்தில் முடிவு
ADDED : ஜூலை 30, 2024 10:57 PM
மயிலாடுதுறை:சித்தர்காடு நவீன அரிசி ஆலை இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு கிராமத்தில் 1981ம் ஆண்டு முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது. தினசரி 100 டன் நெல் அரவை செய்யும் இந்த ஆலையில் இருந்து உமி கரித்துாள் அப்பகுதி முழுவதும் காற்றில் பறக்கிறது.
இதனால் சித்தர்காடு, மாப்படுகை, சோழம்பேட்டை, மூவலூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுவதால் ஆலையை மூடக்கோரி கடந்த 2010ம் ஆண்டு வசந்த் என்பவர் தொடர்ந்த வழக்கில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் தொடர்ந்து ஆலை அரவை நடந்ததால் பாதிப்படைந்த மக்கள் கடந்த 21ம் தேதி சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் நடத்தினர். அதனை அடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் இது தொடர்பான சமாதான கூட்டம் நேற்று மயிலாடுதுறையில் ஆர்.டி.ஓ., விஷ்ணு பிரியா தலைமையில் நடந்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சதீஷ்குமார், டி.எஸ்.பி., திருப்பதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் மற்றும் சித்தர்காடு கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆலையில் இருப்பு உள்ள 100 டன் நெல்லை ஒரு சில தினங்களுக்குள் அரைத்து முடிப்பது. அதன் பிறகு மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தலின்படி பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது. அதுவரையில் தற்காலிகமாக அரவைப் பணிகளை நிறுத்தி வைப்பது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று நீர் பகுப்பாய்வு அடிப்படையில் தமிழக அரசுக்கு பரிந்துரைப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறினர். அதனை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டதால், சமூகத் தீர்வு காணப்பட்டது.