Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/மணல் கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்ய தவறிய எஸ்ஐ, கான்ஸ்டபிள் ஆயுதப்படைக்கு மாற்றம்

மணல் கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்ய தவறிய எஸ்ஐ, கான்ஸ்டபிள் ஆயுதப்படைக்கு மாற்றம்

மணல் கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்ய தவறிய எஸ்ஐ, கான்ஸ்டபிள் ஆயுதப்படைக்கு மாற்றம்

மணல் கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்ய தவறிய எஸ்ஐ, கான்ஸ்டபிள் ஆயுதப்படைக்கு மாற்றம்

UPDATED : ஜூலை 23, 2024 08:46 PMADDED : ஜூலை 23, 2024 08:30 PM


Google News
Latest Tamil News
மணல்மேடு அருகே அனுமதி இன்றி மணல் கடத்தல் ஈடுபட்டவரை கைது செய்ய தவறிய சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிலை மாவட்ட எஸ்பி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. மணல் கடத்தலை தடுக்க சுரங்கம், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மணல்மேடு பேரூராட்சி தலைவரும், திமுகவைச் சேர்ந்தவருமான கண்மணியின் கணவர் அறிவு என்பவரின் அறிவுறுத்தலின்படி கொள்ளிடம் ஆற்றில் இருந்து உரிய அனுமதி இன்றி டிராக்டரில் மணல் கடத்தி வரப்பட்டு உள்ளது. டிராக்டரை மணல்மேடு பகுதியை சேர்ந்த செல்வக்குமார் மகன் நிர்மல்.19. என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

தகவல் அறிந்த மணல்மேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அகோரம், கான்ஸ்டபிள் சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாப்பாக்குடி என்ற இடத்தில் டிராக்டரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் டிராக்டரை ஓட்டி வந்த நிர்மல் கல்லூரி மாணவர் என்பது தெரிய வந்தது இதனை அடுத்து அவரை கைது செய்யாமல் எச்சரித்து விட்டு சென்றுள்ளனர்.

இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி. மீனா உயர் அதிகாரிகள் உத்தரவின்றி நிர்மலை விடுவித்த குற்றத்திற்காக சப் இன்ஸ்பெக்டர் அகோரம் மற்றும் கான்ஸ்டபிள் சந்தோஷை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து மணல்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து நிர்மலை கைது செய்யப்பட்டதுடன், மணல் ஏற்றி வந்த டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் தலைமறைவான அறிவு உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us