/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ விவசாயிகள், கால்நடைகளுடன் மேடான இடத்துக்குச் செல்ல ஆட்டோ மூலம் வருவாய் துறை முன்னெச்சரிக்கை விவசாயிகள், கால்நடைகளுடன் மேடான இடத்துக்குச் செல்ல ஆட்டோ மூலம் வருவாய் துறை முன்னெச்சரிக்கை
விவசாயிகள், கால்நடைகளுடன் மேடான இடத்துக்குச் செல்ல ஆட்டோ மூலம் வருவாய் துறை முன்னெச்சரிக்கை
விவசாயிகள், கால்நடைகளுடன் மேடான இடத்துக்குச் செல்ல ஆட்டோ மூலம் வருவாய் துறை முன்னெச்சரிக்கை
விவசாயிகள், கால்நடைகளுடன் மேடான இடத்துக்குச் செல்ல ஆட்டோ மூலம் வருவாய் துறை முன்னெச்சரிக்கை
ADDED : ஜூலை 31, 2024 06:32 PM

மயிலாடுதுறை:மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டிய நிலையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தை ஒட்டி வங்கக்கடலில் கலக்கும். தொடர்ந்து காவிரியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கொள்ளிடம் ஆற்றின் வழியே 2 லட்சம் கன அடியிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் சென்று கடலில் கலக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்து துறை அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீர்காழி தாசில்தார் இளங்கோவன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஊழியர்கள் கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களான நாதல்படுகை, திட்டும் படுகை, முதலைமேடுதிட்டு, அளக்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆட்டோ மூலம் முன்னெச்சரிக்கை விடுத்தனர்.
அப்போது கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வர இருப்பதால் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ளவர்கள் மேடான இடங்களுக்கு பாதுகாப்பாக செல்லுமாறும் கால்நடைகளை பாதுகாப்பாக ஓட்டிச் செல்லுமாறும் எச்சரிக்கை விடுத்தனர். வருவாய் துறை ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனே இருந்தனர்