Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ சுருக்குமடி வலை பயன்பாட்டை தடுக்க தரங்கம்பாடியில் ஆலோசனைக் கூட்டம்

சுருக்குமடி வலை பயன்பாட்டை தடுக்க தரங்கம்பாடியில் ஆலோசனைக் கூட்டம்

சுருக்குமடி வலை பயன்பாட்டை தடுக்க தரங்கம்பாடியில் ஆலோசனைக் கூட்டம்

சுருக்குமடி வலை பயன்பாட்டை தடுக்க தரங்கம்பாடியில் ஆலோசனைக் கூட்டம்

ADDED : ஜூலை 11, 2024 09:12 PM


Google News
Latest Tamil News
மயிலாடுதுறை,:சுருக்குமடி வலை பயன்பாட்டை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தரங்கம்பாடியில் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் பூம்புகார் தலைமையிலான சில மீனவ கிராமத்தினர் சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், தரங்கம்பாடி தலைமையிலான மீனவ கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் உருவாகி வருகிறது.

இந்நிலையில் சுருக்குமடி வலைக்கு எதிராக கடந்த 25ம் தேதி தரங்கம்பாடியில் 19 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து சுருக்குமடி வலையை பயன்படுத்தி தொழில் செய்யும் சந்திரபாடி, பூம்புகார் உள்ளிட்ட கிராம மீனவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மீனவ கிராமங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் நடந்தது.

இதில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், விழுந்தமாவடி, செருதூர் மற்றும் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு மீனவ கிராம நிர்வாகிகள் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் கிராமங்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம். சந்திரபாடி, பூம்புகார் மீனவர்களை அழைத்து அனைத்து மாவட்ட மீனவர்களும் இணைந்து பேசி சுமூகமான முடிவு எடுக்கலாம் எனவும், தரங்கம்பாடி தலைமையிலான மீனவர்கள் தொழில் புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்றனர்.

தொடர்ந்து இன்று 12ம் தேதி தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களை அழைத்து பேசி, அதனடிப்படையில் நாளை 13ம் தேதி நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண தீர்மானிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us