Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ டாஸ்மாக் கடையில் மது அருந்தியவர் பலி

டாஸ்மாக் கடையில் மது அருந்தியவர் பலி

டாஸ்மாக் கடையில் மது அருந்தியவர் பலி

டாஸ்மாக் கடையில் மது அருந்தியவர் பலி

ADDED : ஜூலை 09, 2024 09:25 PM


Google News
மயிலாடுதுறை:டாஸ்மாக் கடையில் மது அருந்தியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை சேந்தங்குடியை சேர்ந்தவர் கனகராஜ்,35; இவர் தனது உறவினர் செல்வகுமாருடன் சீர்காழி அருகே கொண்டத்துாரில் தங்கி செங்கல் சூளையில் கல் அறுக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இருவரும் கதிராமங்கலம் அரசு டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி அருந்திவிட்டு திரும்பினர்.

அப்போது கனகராஜ் மயக்கமடைந்ததால், அவரை செல்வகுமார் அமர வைத்துவிட்டு உறவினர்களை அழைத்து வந்தபோது, கனகராஜ் மயங்கி கீழே கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர், கனகராஜை பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்ததை உறுதி செய்தார்.

தகவலறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கனகராஜின் தந்தை குணசேகரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us