/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை பயணியிடம் ரயிலில் திருட்டு முயற்சி: வாலிபர் கைது மதுரை பயணியிடம் ரயிலில் திருட்டு முயற்சி: வாலிபர் கைது
மதுரை பயணியிடம் ரயிலில் திருட்டு முயற்சி: வாலிபர் கைது
மதுரை பயணியிடம் ரயிலில் திருட்டு முயற்சி: வாலிபர் கைது
மதுரை பயணியிடம் ரயிலில் திருட்டு முயற்சி: வாலிபர் கைது
ADDED : மார் 19, 2025 04:47 AM
நாகர்கோவில் : சிக்னலுக்காக நின்ற ரயிலில் பயணியிடம் பணப்பையை திருடிய வாலிபரை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கேரள மாநிலம் புனலூரில் இருந்து மதுரைக்கு செல்லும் விரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்துக்கு வெளியே சிக்னலுக்காக நின்றது.
இதில் மதுரையைச் சேர்ந்த ராஜ்கமல் 39, பயணித்தார். அவரது பெட்டியில் ஏறிய இளைஞர் இவரிடம் இருந்த பேக்கை எடுத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்றார். அவர் சத்தம் போட்டதால் உஷார் அடைந்த பிற பயணிகள் அந்த நபரை பிடித்தனர்.
நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதற்குள் ரயில் டவுன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. வள்ளியூர் சென்றதும் ரயில்வே போலீசிடம் வாலிபர் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில் அவர் நாகர்கோவில் அருகே திருப்பதி சாரத்தைச் சேர்ந்த சாய் பத்மநாபன் என்பதும், ஐ.டி.ஐ. படித்துவிட்டு கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.