/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கலைஞர் கைவினைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் கலைஞர் கைவினைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
கலைஞர் கைவினைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
கலைஞர் கைவினைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
கலைஞர் கைவினைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 22, 2025 04:21 AM
மதுரை: மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்பும் 35 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
கட்டட, மர வேலைப்பாடு, பாரம்பரிய ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப்பொருட்கள், காலணி தயாரித்தல், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, எம்பிராய்டரி, சுதை வேலைப்பாடு, பூட்டு தயாரித்தல், தையல், கூடை, கயிறு பின்னுதல், மண்பாண்டம், சுடுமண் வேலை, பொம்மை, சிற்ப வேலை, கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், பாரம்பரிய இசைக்கருவி தயாரித்தல், மலர் வேலைப்பாடு, மூங்கில், பிரம்பு, சணல், பனைஓலை வேலைப்பாடுகளில் ஈடுபட்டுள்ளோர் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
35 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்கள் ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு நகல், கடனுக்கான விலை பட்டியல், நலவாரிய அட்டை, திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்க வேண்டும். தொழில் செய்ய ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடன் வழங்கப்படும்.
அதிகபட்சமாக ரூ.50ஆயிரம் வரை மானியம்,5 சதவீத வட்டி மானியம்உண்டு. ஏற்கனவே செய்து வரும் தொழிலில் திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு மதுரை அழகர்கோவில் ரோட்டிலுள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.