ADDED : அக் 02, 2025 03:25 AM
மதுரை : மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் நடத்தும் ஒரு மாத யோகா பயிற்சி வகுப்பு அக்.6ல் துவங்குகிறது.
தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திரில் தினமும் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நடக்கும் இவ்வகுப்பில் எல்லா வயதினரும் எளிதாக செய்யக்கூடிய யோகா ஆசனங்கள், பிராணாயாமம், தியானம், ஓய்வு உத்திகள் பயிற்றுவிக்கப்படும். பெண்களுக்கான வகுப்பு அருகில் உள்ள டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்சிங் ஹோமில் தினமும் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நடக்கும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசப் பிரச்னை, மூட்டு, முதுகு, கழுத்து வலி, கருப்பை, ஹார்மோன் கோளாறுகள், உடல் பருமன், மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா பயிற்சி உதவும். மேலும் விபரங்களுக்கு இயக்குநர் கங்காதரனை 88834 21666ல் தொடர்பு கொள்ளலாம்.


