ADDED : பிப் 24, 2024 04:05 AM
திருமங்கலம் : திருமங்கலம் பாய்ஸ் டவுன் சொசைட்டி எப்.எம்., மெட்ரிக் பள்ளியில் உலக சிந்தனை தினம் மற்றும் சாரண சாரணிய இயக்கத்தை தோற்றுவித்த லார்ட் பேடன் பவுல் பிறந்தநாள் விழா பள்ளியின் மாணவர் பார்லிமென்ட் தலைவர் யோகாநந்த் தலைமையில் கொண்டாடப்பட்டது.
லார்ட் பேடன் பவுல் படத்திற்கு மலர் துாவி மாணவர்கள் மரியாதை செலுத்தினர். ஒரு நாளைக்கு ஒரு நல்ல காரியம், ஒரு நற்செயல் செய்ய வேண்டும் என்ற பேடன் பவுல் வாக்கை உறுதி மொழியாக மாணவர்கள் ஏற்று, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.