/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை மேயரின் கணவர் சஸ்பெண்ட் பின்னணி என்ன முதல்வர் வருகையின் போது தி.மு.க., நடவடிக்கை ஏன் மதுரை மேயரின் கணவர் சஸ்பெண்ட் பின்னணி என்ன முதல்வர் வருகையின் போது தி.மு.க., நடவடிக்கை ஏன்
மதுரை மேயரின் கணவர் சஸ்பெண்ட் பின்னணி என்ன முதல்வர் வருகையின் போது தி.மு.க., நடவடிக்கை ஏன்
மதுரை மேயரின் கணவர் சஸ்பெண்ட் பின்னணி என்ன முதல்வர் வருகையின் போது தி.மு.க., நடவடிக்கை ஏன்
மதுரை மேயரின் கணவர் சஸ்பெண்ட் பின்னணி என்ன முதல்வர் வருகையின் போது தி.மு.க., நடவடிக்கை ஏன்
ADDED : மே 30, 2025 06:11 AM

மதுரை: மதுரை தி.மு.க., மேயர் இந்திராணி கணவரும், அமைச்சர் தியாகராஜனின் தீவிர ஆதரவாளருமான பொன்வசந்த் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் தலைமையில் நடக்கும் பொதுக் குழு கூட்டத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் நடத்திய செயல்வீரர்கள் கூட்ட நாளில், போட்டியாக மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தை நடத்தினார் மேயர். இதன் பின்னணியில் பொன்வசந்த் இருந்தார் என்பதால் கட்சி தலைமை அதிருப்தியாகியுள்ளது.
நாளை (மே 31), ஜூன் 1 ஆகிய நாட்கள் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் உள்ளார். முதல்நாளில் ரோடு ேஷா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஜூன் 1 ல் கட்சி பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதையொட்டி முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் மே 23ல் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினர். ஆனால் அதேநாளில் மாநகராட்சி கூட்டத்தை மேயர் நடத்தினார்.
ஆனால் தி.மு.க., கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்துவிட்டு கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர். கவுன்சிலர் எண்ணிக்கையில் 'கோரம்' இல்லாத நிலை ஏற்பட்டது. அ.தி.மு.க., துணையுடன் கூட்டம் நடத்தி, தீர்மானங்களையும் நிறைவேற்றினார் மேயர்.
மேயரின் இந்நடவடிக்கை முதல்வர் வருகையின் போது மாவட்ட செயலாளர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதுகுறித்து கட்சித் தலைமைக்கு புகார்கள் அனுப்பப்பட்டதன் அடிப்படையில், மேயரை தவறாக வழிநடத்திய பொன்வசந்தை கட்சி நீக்கியுள்ளது.
அமைச்சர் மீது விமர்சனமா
இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது:
கட்சிக்கு கட்டுப்பட்டவர்கள் தான் மேயர், கவுன்சிலர்கள். செயல்வீரர்கள் கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் தெரிவித்தும், மேயர் பங்கேற்கவில்லை.
அதற்கு பதில் மாநகராட்சி கவுன்சில் கூட்டம் நடத்தி, கவுன்சிலர்களை கட்சி கூட்டத்தில் பங்கேற்க விடாமல் முயற்சி செய்து மாவட்ட செயலாளர்களுக்கே நெருக்கடி கொடுத்தார். இதன் பின்னணியில் பொன்வசந்த் இருந்துள்ளார்.
கவுன்சிலர்கள் சிலர், மாநகராட்சி கூட்டத்தை ஒத்திவைக்குமாறு அலைபேசியில் பொன்வசந்திடம் கேட்டுள்ளனர். அதற்கு 'நாங்க (மேயர்) தான் முன்கூட்டியே தேதி முடிவு செய்தோம். வேண்டுமென்றால் செயல்வீரர்கள் கூட்டத்தை தள்ளி வைக்க சொல்லுங்கள்' என அமைச்சர் மூர்த்தியை விமர்சிக்குமாறு பேசியுள்ளார். இதுதொடர்பான ஆடியோ ஆதாரங்கள் கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டன.
மாநகராட்சி அதிகாரிகளையும் பொன்வசந்த் ஒருமையில் பேசியது, மேயருக்கு பதில் பொன்வசந்த் தான் முடிவுகள் மேற்கொள்கிறார் போன்ற புகார்களும் அவர் மீது அடுக்கடுக்காக தெரிவிக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றனர்.