கிரிக்கெட் வீராங்கனைக்கு வரவேற்பு
கிரிக்கெட் வீராங்கனைக்கு வரவேற்பு
கிரிக்கெட் வீராங்கனைக்கு வரவேற்பு
ADDED : மார் 22, 2025 04:27 AM

பேரையூர்: 19 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் பங்கேற்ற பேரையூர் தாலுகா பெருங்காநல்லுாரை சேர்ந்த வீராங்கனை கமலினி சொந்த ஊருக்கு நேற்று வந்தார். அவரை கிராமத்தினர், உறவினர்கள் வரவேற்றனர்.
கமலினி கூறியதாவது:
நான் 15 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர், 23 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் சீனியர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று திறமையை வெளிக்காட்டினேன். அதனால் தேசிய கிரிக்கெட் அகாடமி சார்பில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். இதன் மூலம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலக கோப்பை போட்டியில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் நமது இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டியிலும் விளையாடினேன். அதிலும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
நான் கீப்பிங் மற்றும் இடது கை பேட்டராக உள்ளேன். என் குடும்பத்தினர் ஒத்துழைப்பு தருகின்றனர். மும்பை அணிக்காக டபிள்யூ.பி.எல் போட்டியில் விளையாட ரூ.ஒரு கோடி 60 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர் என்றார்.