/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஒரு போக பாசனத்திற்கு செப்.18 ல் தண்ணீர் திறப்பு ஒரு போக பாசனத்திற்கு செப்.18 ல் தண்ணீர் திறப்பு
ஒரு போக பாசனத்திற்கு செப்.18 ல் தண்ணீர் திறப்பு
ஒரு போக பாசனத்திற்கு செப்.18 ல் தண்ணீர் திறப்பு
ஒரு போக பாசனத்திற்கு செப்.18 ல் தண்ணீர் திறப்பு
ADDED : செப் 12, 2025 04:58 AM
மதுரை: மதுரை மாவட்டத்திற்கான ஒருபோக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து செப். 18 ல் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே ஜூலை 17 ல் பேரணை முதல் கள்ளந்திரி வரையான இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மேலுாரில் 85 ஆயிரம் ஏக்கர், திருமங்கலத்தில் 19 ஆயிரத்து 500 ஏக்கர் ஒருபோக பாசனத்திற்கு செப். 18 ல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேலுாருக்கு தினமும் 900 கனஅடியும், திருமங்கலத்திற்கு 230 கனஅடி வீதம் தினமும் 1130 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.