ADDED : மார் 25, 2025 04:46 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் பிரதான குழாய் சீரமைப்பு பணிகள் நாளை (மார்ச் 26) முதல் நடக்க உள்ளதால் சம்பந்தப்பட்ட மண்டலம் 3 க்குரிய வார்டுகளில் குடிநீர் வினியோகம் 3 நாட்கள் நிறுத்தப்படவுள்ளது.
57வது வார்டில் ஆரப்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே செல்லும் வைகை தென்கரை ரோட்டில் உள்ள குடிநீர் பிரதான குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்கும் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் மார்ச் 26, 27, 28ல் 21 முதல் 35 வார்டுகள் வரையும், 10, 12, 14, 15, 16, 17 ஆகிய வார்டுகளிலும் குடிநீர் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.