/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாத ஊதியம் வலியுறுத்தும் கிராம கோயில் பூஜாரிகள் மாத ஊதியம் வலியுறுத்தும் கிராம கோயில் பூஜாரிகள்
மாத ஊதியம் வலியுறுத்தும் கிராம கோயில் பூஜாரிகள்
மாத ஊதியம் வலியுறுத்தும் கிராம கோயில் பூஜாரிகள்
மாத ஊதியம் வலியுறுத்தும் கிராம கோயில் பூஜாரிகள்
ADDED : மார் 24, 2025 05:22 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி சின்னக்கருப்பசுவாமி கோயிலில் விசுவ ஹிந்து பரிஷத், கிராம கோயில் பூஜாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவையின் ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. வி.எச்.பி., மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பூஜாரிகள் பேரவை ஒன்றிய அமைப்பாளர் திருஞானபாண்டி, நிர்வாகிகள் மலைச்சாமி, கணேசன், வேலுமணி, மதியழகன், முருகன், ராமமூர்த்தி, தனுஷ், அருள்வாக்கு பேரவை ராமுக்காளை பங்கேற்றனர்.
நல வாரியத்தில் பதிவு செய்யும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது, 60 வயதுக்கு மேற்பட்ட பூஜாரிகளுக்கு ஓய்வூதியம், தேர்தல் அறிக்கையின்படி பூஜாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.