/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உப்புத் தண்ணீர் பயன்பாட்டால் 'கிட்னி' பாதிப்புக்குள்ளான கிராமம் உப்புத் தண்ணீர் பயன்பாட்டால் 'கிட்னி' பாதிப்புக்குள்ளான கிராமம்
உப்புத் தண்ணீர் பயன்பாட்டால் 'கிட்னி' பாதிப்புக்குள்ளான கிராமம்
உப்புத் தண்ணீர் பயன்பாட்டால் 'கிட்னி' பாதிப்புக்குள்ளான கிராமம்
உப்புத் தண்ணீர் பயன்பாட்டால் 'கிட்னி' பாதிப்புக்குள்ளான கிராமம்
ADDED : ஜூன் 28, 2025 12:53 AM

மேலுார்: நா.கோயில்பட்டி ஊராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமாக இருப்பதால் மக்கள் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாவதோடு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இக்கிராமத்தைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஊராட்சி சார்பில் போர்வெல் அமைத்து மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கின்றனர். இத் தண்ணீர் பருகுவதற்கு ஏற்றதாக இல்லாமல் அதிக உப்புத்தன்மையுடன் உள்ளது.
உப்புத்தன்மையுள்ள நீரை பயன்படுத்திய அக்கிராமத்தின் சுரேஷ் கிருஷ்ணன், சுந்தர்ராஜன், புள்ளி, கனகு, பாண்டி உள்ளிட்ட பலர் 'கிட்னி' பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதிக உப்புத் தன்மையுள்ள தண்ணீரை பயன்படுத்தியதே கிட்னி பாதிக்க காரணம் என டாக்டர்கள் கூறுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சிகிச்சை பெறும் மனோகரன் கூறியதாவது:
ஊராட்சி சார்பில் விநியோகிக்கும் தண்ணீரை பாத்திரத்தில் பிடித்து வைத்தால் உப்பு படிகிறது. அதனை பருக முடியாத அளவுக்கு உவர்ப்பு தன்மை உள்ளது. வேறு வழியின்றி பயன்படுத்தியதால் பலர் பாதித்துள்ளனர். பலர் மதுரை, மேலுார், சிங்கம்புணரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் இயந்திரம் பெயரளவில் செயல்படுகிறது. எனவே, காவிரி கூட்டுக் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஊராட்சி செயலர் இளையராஜா கூறுகையில், ''ஏற்கனவே அதிக உப்பாக இருந்த போர்வெல் தண்ணீரை நிறுத்திவிட்டுத்தான், வேறு போர்வெல் தண்ணீரை விநியோகிக்கிறோம். சுத்திகரிப்பு இயந்திரம் மூலமாகத்தான் தண்ணீர் சப்ளை செய்கிறோம்.'' என்றார்.